>
> காலிதின் ரிவ்யூ படித்துவிட்டீர்களா என்றார், இல்லையென்றேன். அப்போதைக்கு நிக்கத்
> காஸ்மியையும் (TOI), ராஜீவ் மஸந்தையும் (IBN) மட்டுமே படித்திருந்தேன்.
> இன்று காலை, எனது அபிமான காலிதையும் படித்தேன். காலித் மட்டுமே சரியான
> விமர்சனப் பார்வையை வைத்திருக்கிறார் (நான் ரசிகனாக இருக்கின்றேனென்றால்
> சும்மாவா :-))) ). காலிதின் ரிவ்யூ படித்தால் சுட்டி அனுப்பச் சொன்னார்,
> அவருக்கு மட்டுமல்லாது பண்புடன் வாசகர்களுக்கும்...
ராஜீவ் மஸந்த், காலீத் இருவரின் விமர்சனங்களையும் பார்த்துப்படித்து
விட்டாகி விட்டது. ஆசாத்ஜீ விமர்சனத்திற்காகக் காத்திருந்தேன்
>
> நேரம் கிடைக்கையில் இன்னும் எழுதலாம்.
எழுதுங்கள்! அடுத்த முறை வருகையில் பார்க்கிறேன். ஜரீனா வஹாப் பற்றி
எழுதவும். கஜோலின் கதாபாத்திர அமைப்பு சரியில்லை எனப்படுவது குறித்தும்,
இசை இன்னும் "குச் குச் ஹோத்தா ஹை,"தாக்கத்திலிருந்து வெளியேறாமல்
இருக்கிறது என்பது குறித்தும் எழுதுங்கள். மிகவும் அழுத்தமாக, இறுக்கமான
திரைக்கதையமப்பு என்றும் சில தளங்களில் படித்தேன். உங்கள் கருத்து என்ன?
தமிழன் வேணு
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
No comments:
Post a Comment