உங்களுக்கு கனிமொழி குறித்து உயர்வான எண்ணம் இல்லாமல் இருக்கலாம், எனது
பார்வை வேறு.
வட்டம், பகுதி, தொகுதிகளின் ஒன்றுவிட்ட மைத்துனர்களின் அடாவடியைப்
பார்த்திருந்தீர்களென்றால் கனிமொழி எத்தனை எளிமையானவர் என்பது விளங்கும்.
பகுதி தொகுதிகளுடன் ஒப்புநோக்கி என்பது மட்டுமல்ல, கனிமொழியின் மற்ற
அணுகுமுறைகளும் வழமையான திராவிடக் கலாசார அரசியல்வாதியின்
அணுகுமுறையிலிருந்து மாறுபட்டவை.
மருத்துவர் அ.கலாநிதி (கலாநிதி மாறன் அல்ல, மருத்துவர் கலாநிதி)
கழகத்தில் முன்பு அப்படி இருந்தார். கே.ஏ.கிருஷ்ணசாமி அ.தி.மு.கவில்
(எம்.ஜி.ஆர். காலம்) அப்படி இருந்தார்.
எளிமையான அணுகுமுறை, பொறுமையான உரையாடல், பாராளுமன்ற உறுப்பினர் என்னும்
ஒளிவட்டம் தவிர்ப்பது, முன்பின் நான்கைந்து படோடப அடியாள்கள் இல்லாதது,
இப்படிச் சிலவற்றைச் சொல்லலாம்.
முதல்வரின் மகள் என்ற காரணத்துக்காக கனிமொழியின் நல்ல குணாதிசயங்களை
கண்டுகொள்ளாமல் விடுவது எனது பார்வையில் சரியன்று.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
No comments:
Post a Comment