கிரந்தம் தவிர்க்கவேண்டுமென்பதுதான் எனது அடிப்படைச் சிந்தனையும், எனது
பெயரில் 'ஆஜாத்'ஐ ஆசாத் ஆக்கி ஓரளவு கிரந்தம் தவிர்த்திருக்கிறேன்,
ஆயினும், அதிகமாக உருது இந்திப் பெயர்களை, வரிகளைச்
சுட்டிக்காட்டுவதாலும், எனது 'தக்கியா கலாமாக' (அடிக்கடி உச்சரிக்கும்
வாக்கியம்) சல்தாஹை இருப்பதாலும், எழுதும் பாணி சிலசமயம் நெல்லை
இஸ்லாமியரின் பாணியாக இருப்பதாலும், கிரந்தம் கலந்துவிடுகின்றது. இது
குறித்து இராம.கி.அய்யாவைச் சந்திக்கும்போது பேசவேண்டும்.
இருப்பினும், சல்தாஹை இல்லாமல் பதிப்புகளுக்காக எழுதும் கட்டுரைகளில்
கிரந்தம் தவிர்க்கிறேன்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
No comments:
Post a Comment