Tuesday, February 16, 2010

[தமிழமுதம்] Re: இதுவும் ஒரு காதல் கதை

என்னை ஏன் கிண்டல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

நிஷாவை நான் பார்க்க வேண்டும். இதை சொல்லியதற்குத்தான் கிண்டல்களும் கேலிகளும், 
ஏன் நீ ரூட்டு போடலாம்னு பார்க்கறியா? நீ ஏன் டா செகண்ட் ஹாண்ட்டை விரும்புற? இப்படிட்யான கேள்விகள்தான் வருகிறது, நிஷாவைப்பற்றி நான் நண்பர்களிடம் கேட்கும் போது.

நிஷாவிடத்தில் ரவியிருந்திருந்தாள் இவர்களுக்கு ரவியின் மேல் அளவுக்கடந்த கருணை பிறந்திருக்கும், நிஷாவையும் அவளது பிறப்பையும் எதாவது ஒரு சனிக்கிழமைகளின் இரவு நேரத்தில் சந்தேகத்துடன் விவாதித்திருப்பார்கள்.

என்ன ஆனாள் நிஷா?

உயிருடந்தான் இருப்பாளா? அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா? தற்கொலை செய்து கொண்டிருப்பாளா? பெண்களால் பந்தாடப்படும் ஆண் பல பெண் சகவாசங்களையும், வேறு பழக்கங்களுக்கும் உந்தப்படுபவர்களை போல் அவளுக்கும் பல ஆண் நட்பு என்ற பெயரில் மாறியிருபாளோ என்று நினைக்கும் போதே, பரிதாமாக பார்க்கிறது நிஷாவின் பிம்பம் என்னை நோக்கி.

எல்லா சராசரி காதலர்களை போலத்தான் ரவி & நிஷா காதல் இருந்திருக்கிறது. சத்யமும், மெரினாவும், ரெஸ்டாரண்ட்களுமே அவர்களது உலகமாக இருந்திருக்கிறது. சின்ன சின்ன சில்மிஷங்களும், சில முத்தங்களும் பரிமாறப்பட்டிருந்திருக்கிறது. 

இவையெல்லாம் நடந்ததா என்று தெரியவில்லை. ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே இதை நம்பவேண்டியிருக்கிறது. 

ரவி கார் விற்கும் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்திருக்கிறான், அந்த நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் பகுதியில் வேலைபார்த்து வந்திருந்தவள் நிஷா மஹாபலிபுரம் போனதுதான் அந்த 120 கிமீ என்பதும் தெரிந்து கொண்டோம், அவளது பிறந்தநாளாம். 

எப்படியோ அன்று அவர்களுக்கு ஒரு ட்ரீட் கிடைத்தது.

மகாபலிபுரத்தில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு கடைசி வரை அவன் பதில் சொல்ல வில்லை. அவளை சின்சியராக காதலிக்கிறேன் என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். இவர்களும் அதைப்பற்றி கேட்பதை நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களை பற்றி மறந்துவிட்டிருக்கிறார்கள், அவளை மருத்துவமனையில் ஒரு நாள் சேக்கும் வரை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று எனக்கு ஆரம்பத்தில் தெரியாது, நிஷா தூக்க மாத்திரை சாப்பிடாடா அவன் தொலைபேசியில் நடுங்கிய போதுதான், எங்களையும் பதற்றம் பற்றிக்கொண்டது என்றார் அறைத்தோழர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரவிக்கு அவர்களது வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.அதை அவளிடம் சொல்லிய அடுத்த தினமே தூக்கமாத்திரை உட்கொண்டிருக்கிறாள். அலுவலகத்தில் அரைநாள் விடுப்பில் இருவரும் கடற்கரை சென்றுள்ளார்கள், மதியமே அலுவலகத்தில் உட்கொண்டிருக்கிறாள். கடற்கரையிலேயே மயங்கியிருக்கிறாள். அருகில் இருந்த முகமறியாதவர்களின் உதவியோடே அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். அதற்குள் விசயம் பெண்ணின் தாய் மாமாவிற்கு தெரியப்போக, ரவியை மருத்துவமனை வாசலிலேயே அடித்திருக்கிறார், டாக்டர ரவியின் மேற்பார்வையிலேயே கார் வாங்கியிருந்தார், அந்த வகையில் ரவி மேல் நல்லெண்ணம் இருந்ததால் டாக்டரும் போலிஸ் கேசாகாமல் பிழைக்க வைத்துவிட்டார் நிஷாவை. 

மேலும் ரவியின் அக்கா வீட்டுக்காரருக்கும் தெரிந்து நிலைமை மோசமாகியது வரை அறைத்தோழர் மூலம் தெரிந்து கொண்டேன். பின்பு இவர்களுக்கும் ரவியை பற்றி எதுவும் தெரியவில்லை, அடுத்த மூன்று மாதங்களில் ரவியிடம் இருந்து திருமண அழைப்பு பத்திரிக்கை வந்திருந்திருக்கிறது, மணப்பெண் நிஷா அல்ல. இவர்களும் இப்பொழுது ரவி, மற்றும் நிஷாவையும் அவர்களது காதலையும் மறந்துவிட்டார்கள். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிஷா இப்போது எப்படி இருப்பாள்? மகிழ்ச்சியாக இருக்கிறாளா? இல்லையா?

இதையெல்லாம் விட எனக்கு தெரிந்து கொள்ள வேண்டியது அவள் உயிருடந்தான் இருக்கிறாளா?
என்பதுதான். 

எனக்கு இது தேவையில்லாத வேலை என்கிறார்கள் எனது நண்பர்கள்.....

நானும் எனது நண்பர் ஒருவரும் ரவி & நிஷா பணிபுரிந்த அந்த நிறுவனத்திற்கு ஒரு புறப்பட்டு சென்றோம்...............

ஏறக்குறைய அந்த சம்பவத்திற்கு பிறகு அவள் வேலையை விட்டிருந்தாள்.

(தொடரும்ம்ம்)

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment