Tuesday, February 16, 2010

Re: [பண்புடன்] Re: கெட்ட பழக்கங்களும் நாமும் - தொடர்

பொய் சொல்வது சரியா? தவற? 

2010/2/16 Haja Muhiyadeen <muhiyadeen@gmail.com>
"உண்மையா சொன்ன யாரு சார் கேக்கிறாங்க. விலைய கூட்டி வச்சி சொன்னா. கொறச்சி கேக்கிறாங்க. அவங்க விருப்பப்படி கொறச்சி தரும்போது சந்தோசமா வாங்கிட்டு போறாங்க. இன்னிக்கு பொய்யில்லாம வியாபாரம் பண்ண முடியாதுங்க"

அவர் சொல்றதில ரொம்ப நியாயம் இருக்கு.

பொய் சொல்றது கெட்ட பழக்கம் என்று இருந்திருக்கு ஒரு காலத்தில. இன்னிக்கு பொய்யில்லாம வாழ முடியாது தேவைப்பட்டா (?) பொய் சொல்லலாம் என்று ஆயி போச்சு. 

இப்பல்லாம் உணமைய சொன்னா கிண்டல் பண்ணி விட்டுடறாங்க. 

"தோடா. அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு. இவரு பொய்யி பேச மாட்டாராமா" என்று நம்மை தனிமை படுத்தி விடுகிறார்கள். 

பொய் சொல்லிட்டா - அடடே. எப்படி சமாளிசிருக்கான் பார். நீ மிடுக்கண்டா என்று பாராட்டுகிறார்கள். 

கடவுளே கடவுளே! 

பள்ளி காலத்தில் நான் உண்மை விளம்பியாக இருந்து கூட்டாளிகளிடம் மாட்டிகொண்டு முழித்திருக்கிறேன்.  அவர் தம் அம்மாமாரிடம் நான் ஊர் சுற்றிய கதைகள் சொல்லிவிட - மவனே, நீ மட்டும் நல்ல பேரு எடுத்துக்கிறே. உன்னை இப்படியே விட்ட சரி வரமாட்டே. இனிமே எங்க கூட வந்து பாரு அப்புறம் இருக்கு என்று நான் தனிமை படுத்தப்படிருக்கிறேன் 

அப்புறம் அநேகமா கல்லூரி காலத்தில் தான் பொய் ஊர்வலம் புறப்பட்டிருக்க வேண்டும். வெளியில் மாங்கு மாங்கு என்று சுற்றி  வெளியில் சாப்பிட்டுவிட்டு - எனக்கு பசி இல்லை என்று சொல்லிவிட்டு படுத்துவிடுவது உண்டு. அவ்வப்போது பொய்யான ஸ்பெசல் க்லாசுகளும் இருந்ததுண்டு. 

கொஞ்ச காலம் கழித்து நாம் பொய் பொய் சொல்ல ஆரம்பிச்சாச்சே என்று நொந்து கொண்டபோது - இதுவரை சொன்னது போதும் இனிமே கவனமாக இருக்கலாம் என்று நினைத்த போது தான் சுஜாதாவின் ஒரு சிறுகதை படித்தேன்.

அது ஒரு பயந்த சுபாவமுடைய அய்யங்கார் ஆத்து மாட்டு பெண் பற்றிய கதை. (கதை பெயர் ஞாபகமில்லை)

மார்கெட்டுக்கு போகும் அந்த பெண் ஒரு ரவுடி கொலை செய்வதை பார்த்து விதிர் விதிர்த்து வீட்டுக்கு ஓடிவந்து எல்லாரிடமும் சொல்கிறாள். இவள் கொலையை பார்த்தது அந்த ரவுடிக்கும் தெரியும்.

வீட்டில் எல்லாரும் அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தி வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம். ரவுடியால் நமக்கு தான் பிரச்னை என்று அறிவுரை கூறுகிறார்கள். அந்த பெண்ணுக்கு உண்மையை சொன்னால் என்ன என்ன பிரச்னை வரும் தெரிகிறது. 

அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் போலிசும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறது

அவளும் ஒத்து கொள்கிறாள்

என்கொயரி வரும்போது சொல்வாளா மாட்டாளா என்று டென்சனில் கதை ஓடும்.

கடைசி கடைசி வரியில் மட்டும்

"ஆமா. நான் பார்த்தேன் இவன் தான்" என்பாள்.

என் மனதை ரொம்பவும் தைத்த கதை இது. பயந்த பெண்ணாக இருந்தாலும் - பிரச்னை வரும் என்று தெரிந்தாலும் ஏகப்பட்ட மனப்போராட்டத்திற்கு பின்னர் உண்மையை சொல்ல

தில்லு வேணும்

கனகராஜ் என்று ஆளை எனக்கு தெரியும். என்னிடம் அறிமுகப்படுத்தி கொண்ட போதே நான் பத்தாம் வகுப்பு வரை ரஷ்யாவில் தான் படித்தேன் என்று ஆரம்பித்திருந்தான்.

போக போக தான் போஜனம் இல்லாமல் வாழ்ந்தாலும் வாழ்வான் இவனால்  பொய் இல்லாமல் வாழவே முடியாது என்று உணர்ந்தேன். வாயை திறந்தால் அப்படி சொல்வான். எல்லாருக்குமே தெரியும் இவன் பொய்யால கெட்டவன் என்று.

ஒரு நாள் வந்து போட்டான் ஒரு போடு.

சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் கல்யாணம் நடந்துவிட்டது என்று.

அப்பவே எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அவனால் தங்க முடியவில்லை. இது உண்மை தான் என்று எல்லாரிடமும் நிரூபிக்க அவனுக்கு வேறு வழியே தெரியவில்லை

எல்லார் தலையிலும் கை வைத்து சத்தியம் செய்தான்.

வேறே வேலை இருந்தால் பார் என்று சொல்லி துரத்தி விட்டோம்.  நொந்து போனான்.

அடுத்த நாள் தான் புலி வந்தே விட்டதை அறிந்தோம்..

பொய் சொல்ல கற்பனை திறனும் நாபக சக்தியும் அவசியம் தேவை.

பொய்யும் புரட்டும் நாம் நிகழ் வாழ்வின் பிரச்னைகளை திசை திருப்ப உதவும்

கல்லா நிரம்பலாம். வயிறு நிரம்பலாம். ஆனால் வாழ்க்கை நிரம்புமா என்று தெரியவில்லை.

இப்ப கூட போன் வந்தது "என்னங்க நேத்து போனை காணோமே.. என்னாச்சு?"

"கொஞ்சம் பிஸியா இருந்தேண்டா" என்று பொய் தான் சொன்னேன். 

நாளை:  வெறி 










--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
நட்புடன்,
செந்தில் குமார்.நா

எல்லாருக்கும் பொதுவாய் இறைவன் கொடுத்த வரம் நேரம் தான்.
எல்லாருக்கும் 24 மணி நேரம் தான்.
இந்த 24 மணி நேரத்தில் நாம் என்ன செய்கிறோமோ - என்ன சிந்திக்கிறோமோ - அது தான் நமது எதிர்காலம் - உலகின் எதிர்காலம்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment