Friday, February 19, 2010

[பண்புடன்] படித்ததில் பிடித்தது

அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம் பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும் இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே, உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும் சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது. உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். அன்பில்லா வாழ்வு மரணமே.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீது தனக்கு அன்பு இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணரும்படி ஒருவர் செய்ய வேண்டும். தான் கூறும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட வேண்டும். அதோடு தன்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ, அமலாக்கவோ இல்லையானால், அதனால் தனக்கு எந்தவிதமான மனக்கஷ்டமும் ஏற்படாது என்பதும், நிச்சயமாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் குற்றம் குறைகளைக் கூறிக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமையை ஒருவர் பெற்றவராவார்.

- காந்திஜி



--
அன்புடன்

ஜோசப் பி கே
------------------------------------------------------
எதை நான் தருவேன் இறைவா
உன் இதயத்தின் அன்பிற்கீடாக
------------------------------------------------------

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment