Friday, February 19, 2010

Re: [பண்புடன்] ஊரோடு ஒத்துப் போகணும்... இல்லேன்னா மிரட்டவும் செய்வோம்



19 பிப்ரவரி, 2010 11:04 pm அன்று, சென்ஷி <senshe.indian@gmail.com> எழுதியது:
அப்ப அண்ணாச்சியோட சினிமா வெளியீட்டுல ஏதும் பிரச்சினை வருமா?!

ஐய்ய்...ஜாலி... தப்பிச்சோம்பா...! தாங்க்ஸ் டூ தல...

அன்புடன்
சுவாதி

2010/2/19 Swathi Swamy <mswathi1025@gmail.com>

நல்லா தான் காட்டுறாங்கய்யா பிலிம்....!

எல்லாம் நமக்கு நல்லது..இப்படியே ஆளாளுக்கு சண்டை போட்டால் சினிமாவே இல்லாமல் போகும்... ! ரசிகர் மன்றங்கள் இல்லாமல் போகும். அரசியலில் நடிகர்களின் ஆதிக்கம் இல்லாமல் போகும்..தமிழகத்திற்கு பொற்காலமா இனி??  :):)

அன்புடன்
சுவாதி


19 பிப்ரவரி, 2010 10:14 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:

ஊரோடு ஒத்துப் போகணும்... இல்லேன்னா மிரட்டவும் செய்வோம்!-வி.சி. குகநாதன்

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/02/19-vc-guhanathan-kalaipuli-sekaran-s.html

ஒரு அரசியல் கட்சித் தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவது போல, குறிப்பிட்ட சினிமா அமைப்புகளுக்கு அதன் உறுப்பினர்கள் கட்டுப்பட்டே தீர வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வழிக்குக் கொண்டுவருவோம்.. மிரட்டவும் செய்வோம்" என்று பகிரங்கமாகவே தெரிவித்தார் ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன்.

அவர் சொன்னதை ஆதரித்துப் பேசினார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன்.

தேவ விஜயம் பிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குகநாதன் பேசியது:

சினிமா கலைஞர்களுக்காக எவ்வளவோ செய்துவிட்டார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு நன்றி சொல்ல முறையாக விழா எடுக்கிறோம். அதில் பங்கேற்பதில் என்ன கஷ்டம்?.

திரைப்பட அமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சி என்றால், அதன் உறுப்பினர்கள் தொண்டர்கள் மாதிரி. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதானே தொண்டர்களின் கடமை. அதை விட்டுவிட்டு விதண்டாவாதம் செய்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் சிலர் ஆதரவு தருகிறார்கள்.

வற்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. நாங்கள் மிரட்டவில்லை... வற்புறுத்தினோம்.

ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்பது பழமொழி. அதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலே கொண்டு வந்தோமோ அதேபோல இருக்குமிடம் தெரியாமலும் செய்ய முடியும்.

நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம்.
என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்... என்ன செய்ய முடியும் இவர்களால் என்றார்.

அடுத்து பேச வந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன், இங்கே விசி குகநாதன் பேசியதை முழுமையாக ஆதரிக்கிறேன். நான் பேச நினைத்ததையெல்லாம் அவர் பேசிவிட்டார்.

நாங்கள் யாரைச் சொல்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். மீடியாக்காரர்கள்தான் இதைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள் என்றார் சம்பந்தமில்லாமல்.

இந்த இருவரின் பேச்சும் திரையுலகினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர்களுக்கான பகிரங்க சவாலாகவே இதை திரையுலகம் பார்க்கிறது. நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று அங்கேயே கேள்வி எழுப்பினார் விழாவுக்கு வந்த ஒரு நடிகர்.

--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment