எங்க ஊர் பக்கம் - மீன்ஸ் திருவாரூர் அடியக்க மங்கலம் கூத்தநல்லூர் இந்த ஏரியா பக்கம் வந்து - காதர் வீட்டுக்கு போகணும்னு கேட்டா எந்த காதர் எப்படி இருப்பார் எங்கே இருக்கார்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்க. ஒட்டை தொப்பி காதர் னு சொல்லி கேளுங்க -
-- அந்தாள கோழி மேயுதுள்ளே. அதுக்கு பீச்சாங்கை பக்கம் உள்ள தெருவுலே ஒரு குப்பை தொட்டி இருக்கும். அதுக்கு பக்கத்தில ஒரு கிராதி போட்ட ஊடு. வாசல்ல ஒரு புல்லேட்டு போத்தி கிடக்கும்
அப்படீன்னு வழி காட்டி விடுவாங்க. தாத்தாவோ தாத்தாவுக்கு தாத்தாவோ யாரோ போட்ட ஓட்டை தொப்பி கேலி பொருளாகி வீட்டு பேரே ஆயிடுச்சு அநேகமா எங்க ஏரியாவில எல்லார் வீட்டுக்கும் ஒரு பட்ட பேரு உண்டு.
கிராமங்கள்ள கேலி செய்யுறது சகஜமா இருந்தாலும் கேலி செய்யப்படுபவரின் மன நிலையை பொறுத்து அது ரசிக்கப்படும். ஒருவர் எல்லா நேரத்திலும் ஒரே மூடில் இருப்பார் என்று சொல்ல முடியாது. கொலை வெறி மூடில் இருந்தால் கேலி பண்ணுனவர் தொலைந்தார்.
என்னோட ஆசிரியர் அடிக்கடி சொல்வார்
ஒரு க்ரூப்புல ஒரு ஜோக்கு சொன்னா அதில எல்லாரும் சிரிக்கணும். ஒருத்தன் மட்டும் உள்ளுக்குள்ள அழுவ மத்தவங்க சிரிக்க கூடாதுன்னு
சின்ன குழந்தைங்களை - அதோட கற்பனா சக்தியை கொண்டு - ஏதாவது க்ரியேடிவா செஞ்சுச்சுன்னா அதை பாராட்டி - அந்த திறமைய முன்னுக்கு கொண்டு வர முயற்சிக்கணுமே தவிர - அயே என்று கிண்டல் பண்ண கூடாது
கிண்டல் பண்ணி வளருற குழந்தைங்க - தாழ்வு மனப்பான்மை கொண்டு - யார்கிட்டயும் ஒட்டாது. நண்பர்களை சேராது. தனியா ஒதுங்க ஆரம்பிச்சிரும். ரிசர்வ்டு டைப்பா வளருற இந்த மாதிரி குழந்தைங்க கிட்ட என்ன தான் நிறய திறமை இருந்தாலும் அதை வெளி கொணருற சக்தி போய்டும்
இதை நாம வெளி காட்டுனா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களோன்னு மறைஞ்சி வாழும்.
நாளைக்கு வெளி உலகத்துக்கு வரும்போது மற்ற ஆளுங்க கூட பழகாம தனிமைய விரும்பி வாழும். படிச்சி FIRST கிளாஸ்ல பாஸ் ஆனாலும் அதை வெளிக்கொணர அறியாமல் இண்டர்வீவ் எல்லாத்திலும் கோட்டை விடும்.
நண்பர்களுக்கு இடையே நிகழும் கிண்டலும் கேலியும் ஒரு அளவோடு இருக்கிறது நல்லது. அடுத்தவரோட ஈகோவை தகர்க்கிற மாதிரி கேலி பண்றது மோசமான விளைவுகளை கொண்டு வந்துவிடும்.
ஒருத்தரோட உடல் உறுப்புகளின் அமைப்பை வைத்து - டேய் மூக்கா - கோயில் யானை - இருட்டு கலர் - இட்லி குண்டான் - பம்ப்ளிமாஸ் - சொட்டை மண்டையா என்றெல்லாம் விமர்சிப்பது அவரை உள்ளுக்குள் கருவ செய்யும். நமக்கு எதிரான ஒரு செயல் நடக்கும்போது நிச்சயமாக அவர் நம் எதிர் அணியில் இருப்பார்.
இன்னும் கொஞ்ச பேரு ஊனத்தை கிண்டல் பண்றாங்க.
குருட்டு பயலே - நொண்டி - கூனா என்று அவர்களை விமர்சிப்பது கடவுளை பலிப்பது போலத்தான்.
இளைய தளபதி விஜய் பீல்டுக்கு வந்தப்ப - ஹீரோ ஆகி முதல் படம் குமுதத்தில் விமர்சனம் வந்திருந்தது.
ஒண்ணுமே எழுதலை அவங்க.
"இந்த மூஞ்செல்லாம் பார்க்கணும்னு தமிழ்நாட்டு மக்களுக்கு தலையெழுத்து"
இது மட்டும் தான் விமர்சனம். (அடுத்த இதழ்ல மன்னிப்பு கேட்டுட்டாங்க)
இன்னிக்கும் அவர் கோமாளி நடிப்பை விடலைன்னாலும் - அவரோட வாழ்க்கை தரத்தை - திறமைகளை ஒப்பிட்டு பார்த்தா - எப்படி வளர்ந்திருக்கார்னு தெரியும்.
யார்கிட்ட என்ன திறமை இருக்குன்னு யாருக்குங்க தெரியும்.
உருவத்தை வச்சி அண்டர் எஸ்டிமேட் பண்றது ரொம்ப தப்பு.
சர்தார்ஜிகளை பற்றி கிண்டல் பண்ற முட்டாள் தனமான ஜோக்ஸ் ரொம்ப பிரபலம்.
அதே மாதிரி ஒரு சர்தார்ஜி பற்றி ஜோக் அடிசிட்டிருந்தப்ப இன்னொருத்தர் சொன்னாராம்.
தமிழர்கள் இப்படியே கிண்டல் பண்ணி ஜோக் அடிச்சிட்டு இருக்காங்க. ஆனா சர்தார்ஜி எல்லாம் முன்னேறி இப்ப செங்கோட்டைல கொடி எத்தற அளவுக்கு வந்திட்டாங்க.
நாளை: click forward!!!
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment