Thursday, February 18, 2010

Re: [பண்புடன்] Re: கெட்ட பழக்கங்களும் நாமும் - தொடர்

nanraha irrukkirathu thodarnthu ezhuthungangal

2010/2/15 Haja Muhiyadeen <muhiyadeen@gmail.com>
நம் வாழ்க்கையே நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. நம் சுற்றமும் நட்பும் கூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே பின்னப்படுவது.

பாம்பை கண்டால் அடிக்கின்றோம். தேளை கண்டால் அடிக்கின்றோம். பூரானை கண்டால் அடிக்கின்றோம். ஏனென்றால் அதன் மீது நமக்கு நம்பிக்கை இல்லை. அசந்த நேரத்தில் நம்மை அனுப்பி வைத்துவிடும் என்று பயப்படுகிறோம். அது பாட்டுக்கு வேறு சிந்தனையில் ஓரமாக நகர்ந்து போனாலும் குச்சியை விட்டு குடைந்து வெளியே எடுத்து சாகடித்து விட்டு தான் மறுவேலை. 

இப்படி தான் நம்பிக்கை இல்லாவிட்டால் ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக்கொண்டு செத்து விடுவோம். ஒருத்தருடைய நடவடிக்கையை நடை உடை பாவனையை பார்த்து சட்டென்று அவர் மீது நம்பிக்கை கொண்டு பின்பு அவரால் ஏமாற்றப்படுவது  இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. 

ஆனால் அதிக காலம் எடுத்து கொண்டு பழகி - இவரை போல வருமா என்று ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு அதற்கு பிறகு இழைக்கும் துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. 

என் உறவினர் ஒருவர் துபாயிலிருக்கும்போதே சென்னையில் ஒரு பிசினஸ் தொடங்கி கொண்டு ஊரில் செட்டில் ஆகலாம் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட பதினைந்து வருடம் பாடுபட்டு சேர்த்த பணத்தை அவர் ஆருயிர் நண்பரிடம் கொடுத்து எல்லாரும் சேர்ந்து வீடியோ ஆடியோ ஜெராக்ஸ் லமினாசன் கடை ஒன்றை துவக்கினார்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வீடியோ கடைகள் பிரபலம்.

நடிகர் ஜெயஷங்கர் தான் கடையை துவக்கி வைத்தார். அண்ணா நகரில் அந்த கடை அப்போது மிக மிக பிரபலம் ஆனது. நடிகர் ப்ரித்வி ரஹ்மான் நடிகை ஹீரா உட்பட மிக பிரபலமானவர்களும் IAS ஆபீசர்ஸ் - central revenue department அதிகாரிகள் எல்லாரும். அந்த கடையில் உறுப்பினர் ஆனார்கள். பணம் போட்டவர் துபாயில் தான் இருந்தார்.

 நண்பர் சென்னையில் தனது மகன்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார். வருகின்ற லாபத்தை எல்லாம் செலவாக கணக்கு காட்டி கே கே நகரிலும் புரசை வாக்கதிலும் மகன்களுக்கு தனி தனியாக கடை ஆரம்பித்தார். செலவு மட்டும் அல்லாமல் கடையே அடமானமாக வைத்து சேட்டுகளிடம் கடன் வாங்கினார்.  

உறவினர் வரலாமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து வந்தே விட்டார். எல்லா கடன்களும் - செலவுகளும் அவர் பெயரில் விழ மனிதர் உடைந்து போய்விட்டார். அத்துடன் அவர் மகளுக்கு திருமணம் வேறு எற்பாடு செய்யப்பட்டிருக்க மிக பெரிய கடன் காரராகிவிட்டார். 

பத்து வருடத்துக்கு பிறகு வாயில் ஏற்பட்ட கான்சர் புரயோடியும். சங்கிலி புகைப்பிடிப்பாளராக இருந்த காரணத்தினாலும் அந்த நண்பர் சிகிச்சை செய்ய பணம் இன்றி தான் இறந்து போனாராம். 

அவர்களது மகன்களும் அந்நிய செலாவணி மோசடி கேசுகளில் அலைக்கழிந்து கொண்டிருப்பதாகவும் வாழ்க்கை நடத்தவே போராடிக்கொண்டிருப்பதாக்வும் கேள்வி பட்டேன். 

இது என்னவோ சினிமா கதை மாதிரி இருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை கியாஸ் தியரியாக எடுத்து கொள்ளலாம்.

உழைக்கின்ற காசே நிற்பதில்லை. துரோகத்தில் விளைந்த காசு எவ்விதம் நிற்கும்?

ஊரை அடித்து உலையில் போடலாமா? சிவன் சொத்து குல நாசம் அல்லவா?

நம்மை நம்பி ஒருவர் சொல்லும் ரகசியத்தை லீக் அவுட் செய்வதும் கூட துரோகமே. 

தன்னை நம்பி வெளியில் அனுப்பி வைக்கும் பெற்றோருக்கு தெரியாமல் boy friend / girl friend என்று ஊர் சுற்றுவதும் துரோகமே. 

பாதிக்கப்பட்டவர்களின் சாபங்கள் கடவுளிடத்தில் உடனடியாக ஏற்கப்படுகின்றன. 

ஓடிப்போன நிதி நிறுவனர்களும் - அமானித பணத்தை சூறயாடியவர்களும்,  அறநிலையதுறையில்  ஒதுக்கியவர்களும் - அனாதைகளின் சொத்தை அபகரித்தவர்களும் - தேசத்தை கட்டி கொடுப்பவர்களும் - வரலாற்றை திரித்தவர்களும் - கணவனுக்கு துரோகம் செய்த மனைவியும் - மனைவிக்கு துரோகம் செய்த கணவனும் - பெற்றோருக்கு செய்த பிள்ளைகளும் இன்னும் இன்னும் இன்னும் நம்பிக்கைக்கு வெட்டு வைத்த எல்லா சுற்றமும் நட்பும் 

குற்றம் புரிந்தவர்களே.

குற்றம் புரிந்தவர் வாழ்விலே நிம்மதி ஏது? 

நாளை: பொய் சொல்லும் நல்ல பழக்கம். 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment