Friday, February 19, 2010

Re: [பண்புடன்] Re: தமிழில் கிரந்தம் - இராம.கி. அய்யாவின் கட்டுரை

பண்டைய இலக்கியத்தில் உள்ளது போல தனித்தன்மையோடு இருக்கும் தமிழை தனியாக காக்க வேண்டும்.

அதே சமயம் அன்றாட வழக்கு மொழியிலும், எழுத்திலும், மொழிப்பெயர்ப்பிலும் கிரந்த எழுத்துக்களோடு தமிழை உபயோகிக்க வேண்டும்.

இரண்டும் கண்டிப்பாக தேவை.

இதில் எதை மாற்ற முயன்றாலும் தமிழருக்குள் கருத்தொற்றுமை ஏற்படாது.

அன்றாட செய்திகளில், கட்டுரைகளில் ஜார்ஜ் புஷ் என்றிருப்பதுதான் சரி.

அதை சார்சு புச்சு என்றாக்குவது தேவையில்லை.

அதே சமயம் இலக்கியக் கட்டுரை, கவிதை போன்றவற்றில் கிரந்தத்தை தவிர்த்து  சுத்தமான தமிழில் எழுதுவதும் அவசியம்.



2010/2/19 ஆசாத் <banuazad@gmail.com>
> கிரந்தம் இல்லாமல் ஹஜ், ஹாஜியார் என்பதை எப்படி எழுதுவீர்கள் என தனிதமிழ்
> அன்பர்களிடம் (இன்னொரு குழுமத்தில்) கேட்டதுக்கு "காஃய்சு" " காஃய்ச்சியார்" என
> எழுதுவோம் என்றார்கள்:-))

இனிய செல்வன்ஜீ,

கிரந்தம் வரவேண்டிய இடங்களில் உமறுப்புலவர் எப்படி தமிழைக்
கையாண்டிருக்கிறார் என்று கட்டுரைகளே இருக்கின்றனவே, நீங்கள் சொல்லும்
குழுமத்தார் அதனை அறிந்திருக்கவில்லையா? உமறுப்புலவர் 'ஹஜ்' என்னும்
வார்த்தையை 'கச்சு' என்று குறிப்பிடுகிறார். முஹம்மது - முகமது,
இப்படியாகப் பல உண்டு.

சில நேரங்களில் நானும் இராம.கி.அய்யாவின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
உதாரணமாக, ஆங்கிலத்தில் திருவல்லிக்கேணி என எழுதாமல் அது ட்ரிப்ளிகேன்
ஆனது. இது ஒரு உதாரணத்திற்குதான், ஒட்டகமண்ட் - உதகமண்டலம் என
அடுக்கிக்கொண்டே போகலாம். இப்பொழுதும், அரபியில் ஜப்பான் கிடையாது,
'யாபான்'தான்.

இப்போதைக்கு விவாதம் துவங்கும் சூழலில் நான் இல்லை, சல்தா*கை* :-)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment