Wednesday, February 17, 2010

[பண்புடன்] கெட்ட பழக்கங்களும் நாமும் - தொடர்


"வெட்டுறா அவனை" என்று சொல்லி கொண்டு ஓடி பாருங்கள். உங்கள் பின்னால் அரிவாள், கட்டைகள் ஏந்தி கொண்டு நூறு பேர் ஓடி வருவார்கள். 

யாரை வெட்டணும் எதுக்கு வெட்டணும் - யாரும் கேள்வி கேட்பதில்லை. நாயும் யானையும் டென்சன் ஆவது போல வெறி கொண்டு திரிகின்ற மக்கள் யாராவது போட்டு தள்ள வாய்ப்பு கிடைக்காதா? என்று திரிந்து கொண்டிருக்கிறார்கள். எவனாவது அடிக்கணும். ஆனா கேசு ஆவ கூடாது.

மூர்க்கத்தோட பிறந்த மனுசங்க மிருகங்களோட சேந்து மிருகமா தான் வாழ்ந்து வந்திருக்காங்க. நான் வேட்டையாடிய உணவு மீது எவனாவது கைவச்சான அவனுக்கு அன்னிக்கு கடைசி நாள். எனக்கு புடிச்ச ஜோடிய இன்னொருத்தன் தள்ளிட்டு போனா அவனுக்கு அன்னிக்கு சங்கு தான்.

வலியவன் தான் வாழ்வான் என்று இருந்த நிலமைய தனக்குள்ளே கட்டுப்பாடுகள் கொண்டு வந்து பிரிசிக்கிட்டான். இது என்னோட வீடு உள்ளே வரணும்ன கேட்டுட்டு தான் வரணும். இங்கே இருக்கிறது நான் கொண்டு வந்த சாப்பாடு..

இது என்னோடு பிகர். கல்யாணம் கட்டியாச்சி. இனி இந்த பக்கம் தலை வச்சி படுத்தீன்னா  மூஞ்சி பேந்திடும். 

அதுக்கு அப்புறம் எல்லாரும் சந்தோசமா வாழ்ந்திருக்காங்க. கொஞ்ச நாள் தான். 

அப்புறம் வேறே ஒரு இடத்தில உள்ள க்ரூப் இங்கே வந்து எட்டி பார்க்கவும் க்ரூப் கருப்பா அடிச்சிக்கிட்டாங்க.

எல்லா உயிரினத்தையும் படைச்ச கடவுளுக்கு தெரியும். மிருகங்கள் எல்லாம் அது அது நியதிப்படி வாழ்ந்திட்டு இருக்கு. மனுசப்பயலுகளுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா ஒரு சிம்மு வச்சி விட்டது தப்பா போச்சி. 

எல்லாரும் ஒத்துமையா இருங்கடா என்று தான் வேதங்களையும் தூதர்களையும் அனுப்பி மனுசங்களை நல்வழிப்படுத்தினான் 

நல்லவங்களா இருக்கிறவங்களும் இருக்க தான் செய்றாங்க. ஆனா வெறி பிடிச்சவங்களும் இன்னும் இருக்காங்க.

மறுபடியும் பழைய நிலமைக்கு திரும்பிட்டு இருக்கு.

இது என்னோட ஏரியா உள்ள வந்தா கால ஒடிச்சி போடுவேன் என்று ஒரு கூட்டம் கூப்பாடு போட்டுட்டு இருக்கு.

இன்னொரு இடத்தில என்கிட்டே கிளம்பிற தண்ணி எனக்கு மட்டும் தான் போய்யா வேலைய பாத்துகிட்டுன்னு வம்புக்கு நிக்கிறாங்க.

உன்ன புதைக்க இந்த சுடுகாட்டுல இடம் இல்லைன்னு ஒரு க்ரூப் இன்னும் மல்லடிக்கிது.

மதத்து பேரை சொல்லிக்கிட்டு அதை பத்தி புரியாம ஒரு க்ரூப் குண்டு வைக்கிது. இன்னொரு க்ரூப் கலவரத்தை ஏற்படுத்தி ரத்தம் சிந்த வக்கிது. 

சாதி - மதம் - மொழின்னு தனக்கு தானே வட்டம் போட்டுக்கிட்டு வெறியோட திரிகிற கூட்டங்களுக்கு நாம செய்றது எவ்ளோ மோசமான வேலைன்னு. இருந்தாலும் நமக்கு ஒரு கண்ணு போன பரவால்லை. அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணு போவணும்னு ஒரு வெறி. 

யானைக்கு மதம் பிடிக்கும்போதும் நாய்க்கு வெறி பிடிக்கும்போதும் அது அதோட நிலையில இருக்கிறது இல்லை.. 

மனுசங்களும் அப்படி தான். 

நாம்மோட கொள்கையில நம்மோட மொழியில நம்மோட சாதியில நாம பற்று வைக்கலாம். அதுக்காக அடுத்தவங்களை பற்ற வைகக கூடாது.

நம்ம தாயை நாம் அளவு கடந்து நேசிக்கிறோம்.. நம்மை பெற்றெடுத்து உருவாக்கிய தாயை நேசிப்பது இயற்கை தான்.

அதே நேரம் அடுத்தவன் தாயை - அவள் தாயில்லை என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. 

நமக்கு நம் தாய் உசத்தி. அவனுக்கு அவன் தாய் உசத்தி.

அன்று மனிதனுக்குள் உறங்க போன மிருகம் இனி விழிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் அவசரம். 

நாளை : கேலியும் கிண்டலும். 








--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment