Wednesday, February 17, 2010

[பண்புடன்] எச்டிஎம்எல் கோடிங்கை அப்படியே வலைப்பதிவில் காட்டுவதற்கு

ஒரு முக்கியமான பதிவில் ஏதேனும் ஒரு ஜாவாஸ்க்ரிப்ட்டையோ, அல்லது
எச்டி.எம்.எல். கோடிங்கை அப்படியே காட்சிப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
அதற்காக அந்த கோடிங்கை ப்ளாக்கரின் HTML எடிட்டரில் பேஸ்ட் செய்து பதிவை
Save செய்து, இந்த post ஐ, உலவியின் வழியாக பார்க்கிறீர்கள். ஆனால்
பேஸ்ட் செய்யப்பட்ட கோடிங் ஆனது உலவியில் அப்படியே காட்சியளிக்காது. வேறு
ஏதேனும் பிழைச்செய்திகள் கூட உங்களுக்குக் கிடைக்கலாம்.

ஆனால் கண்டிப்பாக வலைப்பதிவின் ஊடே HTML அல்லது JavaScript கோடிங்கை
காட்சிப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருந்தால், இவர்களுக்கு
உதவுவதற்காக ஒரு இணைய தளம் உள்ளது.

அங்கே சென்று ஒரிஜினல் கோடிங்கை Paste செய்து, Encode என்கிற பட்டனை
அழுத்தினால் உடனே என்கோட் ஆக்கப்பட்ட கோடிங் கிடைக்கும். அதை Copy செய்து
கொள்ளவும்.

அதை ப்ளாக்கரின் HTML Editorல் அப்படியே பேஸ்ட் செய்து பதிவை Save
செய்து, உலவியின் வழியே பார்த்தால் நினைத்தது நிறைவேறி இருக்கும்.

எதற்காக என்கோட் செய்ய வேண்டும்?
HTML ல் சில குறியீடுகள் உள்ளன. அதாவது Less than, Greater Than போன்றவை.
இவற்றை அப்படியே திரையில் காண்பிக்க முயற்சித்தால் நமக்குத் தோல்விதான்
மிஞ்சும். இதை என்கோட் செய்தபிறகு முயற்சித்தால் பலன் கிட்டும்.

சுட்டி : http://bit.ly/bBu2XC

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment