Wednesday, December 30, 2009

Re: [பண்புடன்] Re: தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும் - மீள்பதிவு

முழுதாக திருந்திய சமூகம் இருக்கிறதா?

இல்லை.ஆனால் முழுதாக மாறிய சமூகங்கள் நிறைய உள்ளன.நாற்பது வருடத்துக்கு முந்தி "கணவனே கண்கண்ட தெய்வம்" "மணாளனே மங்கையின் பாக்கியம்" என்கிற மாதிரி படங்கள் வந்தன.இன்று தாலியை கழட்டி ககூசில் போட்டு ப்ளஷ் செய்யும் அளவுக்கு காட்சிகள் வருகின்றன.அந்த 7 நாட்கள் இன்று அதே முடிவுடன் எடுத்தால் ஓடாது.

சமூகம் மாற, மாற அது படைக்கும் கலைபடைப்புகளும் தானாக மாறும்.சினிமா ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதற்கான தெர்மாமீட்டர் மட்டுமே.

2009/12/30 செல்வன் <holyape@gmail.com>
நந்தா, சினிமாவை விமர்சிக்க வேண்டாம் என கூறவில்லை.சினிமா இப்படி இருப்பதற்கான காரணிகளை தான் கூறுகிறேன்.சினிமா என்பது கோடிகணக்கில் காசு புரளும் தொழில்.இப்படி சில காட்சிகளை வைத்தால் ரசிகர்களிடம் எடுபடும் என அவர்களுக்கு பட்டால் விமர்சனத்தை பற்றி கவலைபடாமல் அந்த காட்சிகளை அவர்கள் வைத்துதான் தீருவார்கள்.ரசிகர்கள் இம்மாதிரி காட்சிகளை ரசிக்க மாட்டார்கள் என தெரிந்தால் தான் அவர்கள் அதை நிறுத்துவார்கள். மற்றபடி தமிழ்நாடு (கல்வெட்டு சொன்னமாதிரி) பாலியல் வரட்சியில் சிக்கி தவிக்கிறது.அதனால் தமிழ் சினிமாவில் காட்டுவதெல்லாம் ஆபாசம் என நாம் நினைத்துகொள்கிறோம்.ஆபாசத்தை அழகாக காட்டுவதுதான் கலை.ஆபாசமில்லாததை அசிங்கமாக காட்டுவது தமிழ் சினிமா.உடலை அழகாக வெளிப்படுத்துவது எல்லோராலும் முடியாத விஷயம்.தேர்ந்த கலைஞர்கள் மட்டுமே ஆணுடலையோ, பெண்ணுடலையோ அழகாக காட்டமுடியும்.அந்த கலை தமிழ் சினிமாவுக்கு இன்னும் கைவரவில்லை.அல்லது சென்சார் அனுமதிக்கவில்லை. நேற்று பவுண்டி என்ற பல விருதுகளை பெற்ற மெல் கிப்சனின் படம் பார்த்தேன்.டஹிட்டியில் மேலாடை இல்லாமல் இருந்த ஆதிவாசி பெண்களுடன் பிரிட்டிஷ் மாலுமிகள் செக்ஸ் வைத்துகொள்வதும், காதலிப்பதும் படம் முழுக்க வருகிறது.ஆனால் அதை அத்தனை அழகாக எடுத்திருக்கிறார்கள்.அதை ஆபாசம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் ஆபாசம் தான்:)..ஆனால் அது கலை.கலைக்கு ஆபாசம் என்ற கண்ணோட்டமே கிடையாது. சென்சார் புண்ணியத்தில் செக்ஸை அழகாக, முகம் சுளிக்காமல் காட்டுவது எப்படி என்ற விஷயத்தில் தமிழ் சினிமாகாரர்களுக்கு பயிற்சியே இல்லாமல் போய்விட்டது.அதீத மிகைபடுத்தலுடன் இம்மாதிரி காட்சிகளை எடுத்து விடுகிறார்கள்.

2009/12/30 நந்தா <medianandha@gmail.com>

செல்வன், கண்ணாடி, உருவம் என்ற எடுத்துக்காட்டு சினிமா, சமூகம்
இரண்டிற்கு ஒத்து வருமா என்பது சந்தேகமே. சினிமா சமூகத்தைச் சீரழிக்கிறது
என்று ஒரு கூட்டம் ஏற்கனவே இருந்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தைத்
திருத்தினால் சினிமா தானாகவே திருந்தி விடும் நீங்கள் சொல்கின்றீர்கள்.
ஆனால் இப்படி யோசித்துப் பாருங்கள். முழுக்க திருந்திய சமுதாயம் என்று
ஒன்றிருக்கிறதா என்ன? சினிமாவும் கலை ஊடகம்.

ஒரு புத்தகத்தை விமர்சிப்பது போல, ஒரு கலையை விமர்சிப்பது சினிமாவையும்
நாம் விமர்சனத்திற்குட்படுத்தியே ஆக வேண்டும். இது ஒரு பன்முனை முயற்சி.
ஒரே சமயத்தில் சமூகத்தில் நடக்கும் தவறுகளையும், குறிப்பாய்
ஆதிக்கவாதிகளின் பெண்ணடிமைத்தனங்களையும், சினிமா உள்ளிட்ட கலை மற்றும்
ஊடகங்களின் பாலியல் சுரண்டல்களையும் சேர்த்து தலையில் குட்டி,
முன்னெடுத்துச்செல்லும் ஓர் முயற்சி. இவற்றில் ஒன்றை விட்டு இன்னொன்றை
மட்டும் பேசுவது என்பது எந்த வகையிலும் பயன் தராது என்பது என் எண்ணம்.

சொல்லப்போனால் நாம் இது தவறு என்ற விஷயத்தில் ஒத்துப் போகின்றோம். ஆனால்
எதை விமர்சிப்பது என்ற இடத்தில் மாறுபடுகின்றோம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell



--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment